search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் 7 பாக். வீரர்கள் பலி: இந்தியா பதட்டத்தை அதிகரிப்பதாக கூறுகிறார் நவாஸ் ஷெரீப்
    X

    எல்லையில் 7 பாக். வீரர்கள் பலி: இந்தியா பதட்டத்தை அதிகரிப்பதாக கூறுகிறார் நவாஸ் ஷெரீப்

    எல்லைப்பகுதியில் 7 பாகிஸ்தான் வீரர்களை கொன்றதன்மூலம் இந்திய படைகள் பதட்டத்தை அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் இந்திய ராணுவ நிலைகளையும், எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பின்னிரவு இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதனை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பு அலுவலகம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

    அந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கையை இந்திய படைகள் தொடர்ந்து மீறுவதாக கூறிய அவர், தங்கள் மண்ணில் எந்த அத்துமீறலையும் தடுக்கும் முழு வல்லமைபெற்றிருப்பதாக தெரிவித்தார்.

    காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறலை திசைதிருப்பும் வகையில் இந்திய படைகள் எல்லையில் பதட்டத்தை அதிகரித்து வருவதாகவும் ஷெரீப் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே. இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×