என் மலர்

    செய்திகள்

    கிராம பஞ்சாயத்து உத்தரவால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    கிராம பஞ்சாயத்து உத்தரவால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தந்தை செய்த தவறுக்காக கிராம பஞ்சாயத்து உத்தரவால் அவரது மகள் கற்பழிக்கப்பட்டாள். இதனால் அவமானம் தாங்காமல் அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்.
    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் தந்தை  சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பிரச்சினை கிராம பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குற்றம்சாட்டப்பட்டவரின் மகளை கற்பழிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் காரணமாக அந்த பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் 20 வயதான அந்த இளம்பெண், கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் வேலைக்காரணமாக வெளிநாடு சென்று இரண்டு வருடங்களுக்குப்பின் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். தற்போது அந்த பெண்மணி ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் அவமானம் தாங்காமல் மாமியார் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    ஆபத்தான நிலையில் லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிக்சிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ‘‘கடந்த இரண்டு வருடத்திற்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரை பார்க்க விரும்பாததால் தீக்குளித்தேன்’’ என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கொடூரமான கிராம பஞ்சாயத்து தீர்ப்பால் அப்பாவியான இளம்பெண் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது.

    முன்னதாக இந்த பெண்ணின் தந்தை தனது மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
    Next Story
    ×