search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரியாவில் பெண் அதிபர் பதவி விலக கோரி பேரணி
    X

    தென்கொரியாவில் பெண் அதிபர் பதவி விலக கோரி பேரணி

    தென்கொரியாவில் பெண் அதிபர் பதவி விலக வலியுறுத்தி 3 லட்சம் பேர் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    சியோல்:

    தென்கொரியாவின் பெண் அதிபராக பார்க் ஜியுன்-ஹை (64) பதவி வகிக்கிறார். இவரது தோழி சோய்சூன்-சில். இவர் அதிபர் பார்க் செல்லாக்கின் மூலம் ஊழலில் ஈடுபட்டார்.

    அதை ஒப்புக்கொண்ட பார்க் கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி தென்கொரியாவில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இப்போராட்டம் 3 வாரங்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நேற்று தலைநகர் சியோலில் கடும்ட போராட்டம் நடந்தது. பல தெருக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அங்குள்ள சிட்டி சென்டர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 9 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் 3 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாக போலீசார் கணக்கிட்டுள்ளனர். நேற்றைய போராட்டத்தால் சியோல் நகரம் திக்கு முக்காடியது.

    Next Story
    ×