என் மலர்

  செய்திகள்

  ஒழுங்காக வேலை செய்யாத 3 மந்திரிகளை நீக்கியது ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்
  X

  ஒழுங்காக வேலை செய்யாத 3 மந்திரிகளை நீக்கியது ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் ஒழுங்காக வேலை செய்யாத 3 முக்கிய துறைகளின் மந்திரிகளை பாராளுமன்ற சபாநாயகர் அதிரடியாக நீக்கியுள்ளார்.
  காபூல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் மந்திரிகள் தங்களுக்குரிய பணிகளை சரியாக செய்யாதபட்சத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களை பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தில் வழி உள்ளது. அந்த அதிகாரத்தின்படி இன்று வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட மூன்று மந்திரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

  மோசமான செயல்பாடு மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியை குறித்த காலத்திற்குள் செலவு செய்யாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக வெளியுறவுத்துறை மந்திரி சலாஹூதீன் தப்பானி, பொதுப்பணித்துறை மந்திரி மஹ்மூத் பாலிக், சமூக சேவைத்துறை மந்திரி நஸ்ரின் ஆர்யகெல் ஆகியோருக்கு எதிராக பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

  இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மூவருக்கும் எதிராக பெரும்பான்மை வாக்குகள் பதிவானதையடுத்து, அவர்களை பதவிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதேபோல், மேலும் 14 மந்திரிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  தலிபான் ஊடுருவல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த சூழ்நிலையில், மந்திரிகள் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×