என் மலர்

  செய்திகள்

  சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர்: டிரம்ப் திட்டம்
  X

  சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர்: டிரம்ப் திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட புதிய அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

  வாஷிங்டன்:

  கடந்த 8-ந்தேதி நடந்த தேர்தலில் அமெரிக்கா வின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந் தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து பதவி ஏற்பதற்கு முன்னதாகவே புதிய அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் நியமிப் பதில் தீவிரமாக உள்ளார்.

  தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்காவுக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பேன் என டிரம்ப் உறுதி அளித்து இருந்தார். குறிப்பாக அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து ஊடுருவுவதை தடுக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என தெரிவித்து இருந்தார்.

  தற்போது அதை நடை முறைப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள இருக்கிறார். அதற்காக ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது. அக்குழு அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது குறித்து திட்டம் தீட்டுகிறது.

  மேலும் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடி யேறுவதை தடுக்க சட்ட விதி முறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

  குறிப்பிட்ட நாட்டினருக்கு ‘விசா’ வழங்குவதை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட திட்டங்களையும் இக்குழு விவாதிக்கிறது.

  Next Story
  ×