search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் ஷின்ஸோ அபே புல்லட் ரெயில் சவாரி
    X

    பிரதமர் மோடியுடன் ஷின்ஸோ அபே புல்லட் ரெயில் சவாரி

    ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலில் பயணம் செய்தார்.
    டோக்கியோ:

    மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் நேற்று கையொப்பமிட்டன.

    மேலும், மும்பை-அகமதாபாத் இடையே செல்லும் அதிவேக விரைவு ரெயில் சேவைக்கான வழித்தடம் அமைக்கும் பணியை வரும் 2018-ம் ஆண்டில் தொடங்கி 2023-ம் ஆண்டில் இந்தப் பாதையில் ரெயில்களை இயக்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை அந்நாட்டின் ஒசாக்கா வளைகுடா பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான கோபே-வுடன் இணைக்கும் ‘ஷின்கான்சென்’ புல்லட் ரெயிலில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று பிரதமர் மோடி பயணம் செய்தார்.



    சில இடங்களுக்கேற்ப மணிக்கு 240 முதல் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் பேசியபடி பயணிக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×