என் மலர்
செய்திகள்

வீடியோ: வெள்ளை மாளிகையில் குழந்தைகளுடன் ஹாலோவீன் கொண்டாடிய ஒபாமா
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் கொண்டாடிய அதிபர் ஒபாமா குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:
மேற்கத்திய நாடுகளில் பேய்களின் விழா எனப்படும் ஹாலோவீன் விழாவானது ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றது.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
சிலர் இந்த நாளில் விருந்து விழாக்களை ஏற்பாடுசெய்து தங்களை எலும்புக்கூடுகள் போன்ற ஆடைகளை அணிந்து பேய்கள் அல்லது பயங்கரமான உருவங்களாக உருவகப்படுத்தி கொண்டாடுவதுண்டு.
பேய்களின் விழா எனப்படும் ஹலோவீன் நாளின் பொதுவான சின்னங்களாக பூசணிக்காய், வெளவால்கள், மற்றும் சிலந்திகள் போன்றவை காணப்படுகின்றன.
ஹலோவீன் நாளில் விருந்து விழாவுக்கு ஏற்பாடு செய்பவர்கள் விருந்தினர்கள் எலும்புக்கூடுகள் போன்ற அல்லது பேய்கள் போன்ற ஆடைகளை அணிந்து வருவது வழக்கமாகும். இன்னும் சிலர் இந்த நாளில் விருந்தினர்களுடன் இணைந்து பயங்கரமான திரைப்படங்களை தியேட்டரில் அல்லது வீடுகளில் இருந்து பார்ப்பதும் வழக்கமாகும்.
சில சிறுவர், சிறுமிகள் பயமுறுத்தும் விசித்திரமான ஆடைகளை அணிந்து தங்களது பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ளவர்களின் வீடுகளுக்குச்சென்று கதவினைத் தட்டி இனிப்புகள் போன்றவைற்றை சேகரித்து, பின்னர் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
தாமாக முன்வந்து இனிப்புவகைகளை தராதவர்களை தந்திரமாக மிரட்டி, இனிப்புகளை பறித்துச் செல்வதும் உண்டு. அதனால், ஒரு வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே ‘டிரிக் ஆர் டிரீட்’ என்ற கேள்வியுடன் குழந்தைகள் வருவதுண்டு.
‘டிரீட்’ என்று சொல்லி தாங்களாகவே முன்வந்து சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை தருபவர்களுக்கு நன்றிகூறிவிட்டு குழந்தைகள் சென்றுவிடுவதுண்டு. மாறாக, குழந்தைகளின் குறும்புத்தனமான தந்திரங்களை ரசிக்க விரும்பும் பெரியவர்கள், அவர்களுக்கு போக்குகாட்டி, கடைசியாக இனிப்புகளை தந்து அனுப்புவதுண்டு.
அவ்வகையில், இந்த ஆண்டின் ஹலோவீன் விழாவையொட்டி அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ஹலோவீன் விழாவில் அதிபர் பராக் ஒபாமா அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகியோர் குழந்தைகளை மகிழ்விக்க நடனம் ஆடிய வீடியோ காட்சியைக் காண..,

Next Story