search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பிடிக்கும் அதிநவீன செல்போனை மாற்ற விமான நிலையத்தில் விசே‌ஷ பூத் திறக்கும் சாம்சங் நிறுவனம்
    X

    தீப்பிடிக்கும் அதிநவீன செல்போனை மாற்ற விமான நிலையத்தில் விசே‌ஷ பூத் திறக்கும் சாம்சங் நிறுவனம்

    தீப்பிடிக்கும் அதிநவீன செல்போனை மாற்ற விமான நிலையத்தில் சாம்சங் நிறுவனம் விசே‌ஷ பூத் அமைத்துள்ளது.

    சியோல்:

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஐ போனுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் என்ற அதி நவீன செல்போனை அறிமுகம் செய்து விற்பனைக்கு வெளியிட்டது.

    ஆனால் அந்த போன் வீடு மற்றும் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து உலகம் முழுவதும் அந்த செல்போன் விற்பனைக்கு சாம்சங் நிறுவனம் தடை விதித்தது.

    மேலும் விற்கப்பட்ட செல்போன்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. அந்த செல்போன் உற்பத்தியையும் நிறுத்தியது.

    இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி-7 செல்போன்களை விமானத்தில் எடுத்து செல்ல அமெரிக்கா. கனடா, இஸ்ரேல் மற்றும் ஐப்பான் நாடுகள் தடை விதித்துள்ளன.

    எனவே தென் கொரியாவில் சியோல் அருகேயுள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் சாம்சங் நிறுவனம் விசே‌ஷ பூத் அமைத்துள்ளது.

    அங்கு விமான பயணிகள் கேலக்ஸி நோட்-7 செல்போன்களை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வேறு மாடல்போன் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×