search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூரில் ராணுவத்தில் சேர மறுத்ததால் இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை
    X

    சிங்கப்பூரில் ராணுவத்தில் சேர மறுத்ததால் இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை

    சிங்கப்பூரில் ராணுவத்தில் சேர மறுத்ததால் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 6 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் ஆண்கள் அனைவரும் 2 வருடம் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    இந்த விதிமுறையின்கீழ் ராணுவத்தில் சேர மறுத்து விட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

    இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய்கமால் ஷா (வயது 22) என்ற வாலிபர், இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் திரும்பினார். ஒரு மாதம் கழித்து, தான் ராணுவத்தில் சேருவதற்கு பட்டியலிட்டார்.

    ஆனால் அதன்படி அவர் சேராததால், அவருக்கு 6 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×