search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு: போதை மருந்து சோதனைக்கு தயாரா?
    X

    ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு: போதை மருந்து சோதனைக்கு தயாரா?

    போட்டியை சமாளிக்க டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். போதை மருந்து சோதனைக்கு தயாரா? என கேள்வி விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களத்தில் உள்ளார்.

    சர்ச்சைக்குரிய கருத்துகளில் சிக்கிய ரியல் எஸ்டேட் வர்த்தகரான டிரம்ப் மீது பல பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். மேலும் பெண்கள் குறித்து கூறிய கருத்துக்களால் அவரது செல்வாக்கு சரிந்து வருகிறது. அவரது கட்சியினரிடமும், பெண்கள் மத்தியிலும் டிரம்புக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ஆதரவு குறைந்துள்ளது.

    அதை சரிக்கட்ட டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஹிலாரி கிளிண்டன்-டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் 2 தடவை நடந்துள்ளது. இரண்டிலும் ஹிலாரி சாமர்த்தியமாக வாதிட்டு மக்களின் மனதை கவர்ந்தார். அதன் மூலம் மக்கள் செல்வாக்கில் டிரம்பை விட 8 புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார்.

    தற்போது ‘செக்ஸ்’ புகார்களில் சிக்கி டிரம்ப் செல்வாக்கு மேலும் சரிந்து வருகிறது. இதற்கிடையே இறுதிக்கட்ட விவாதம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஹிலாரியை வெற்றி பெற டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    அதன் எதிரொலியாக அடுத்த விவாதத்துக்கு முன்னதாக போதை மருந்து சோதனைக்கு நான் தயார். ஹிலாரி கிளிண்டன் தயாரா? என கேள்வி விடுத்துள்ளார். இதுகுறித்து நியூஹாம்ப்ஷியரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்ட அவர் இறுதிகட்ட விவாதத்துக்கு ஆதரவாளர்கள் புடை சூழ வருவார். திரும்பி செல்லும் போது காருக்கு அவர் மட்டும் தனியே செல்வார் என்றார்.
    Next Story
    ×