என் மலர்
செய்திகள்

பாக்தாத்: மனிதகுண்டு தாக்குதலில் 31 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.
பாக்தாத்:

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற ‘கர்பலா’ போரில் முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுசேன் கொல்லப்பட்ட துக்கநாளான ‘ஆஷூரா’ தினத்தை அனுசரிப்பதற்காக பாக்தாத் நகரில் உள்ள ஷியா பிரிவு மக்கள் இன்று அல்-ஷபாப் மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் ஒன்று திரண்டனர்.
அங்கு ஒரு கூடாரம் அமைத்து துக்கநாள் தொடர்பான சடங்குகளில் ஈடுபட்டபோது, கூட்டத்துக்குள் இருந்த ஒரு தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கி வெடிக்க வைத்தான்.
இந்த மனிதகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Next Story