search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கு சென்ற சீன அதிபர் க்சி ஜின்பிங்-குக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
    X

    வங்காளதேசத்துக்கு சென்ற சீன அதிபர் க்சி ஜின்பிங்-குக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

    வங்காளதேசம் நாட்டுக்கு இன்று சென்ற சீன அதிபர் க்சி ஜின்பிங்-குக்கு டாக்கா விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    டாக்கா:

    கோவா நகரில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ள ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை இந்தியாவுக்கு வருகை தரவுள்ள சீன அதிபர் க்சி ஜின்பிங் முன்னதாக இன்று வங்காளதேசம் நாட்டுக்கு சென்றார்.

    30 ஆண்டுகளுக்கு பின்னர் வங்காளதேசத்துக்கு வருகைதரும் முதல் சீன அதிபர் என்பதால் அவரை சிறப்பாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. க்சி ஜின்பிங்கின் விமானம் வங்காளதேசத்தின் வான் எல்லைக்குள் நுழைந்ததும் அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான 4 போர் விமானங்கள் அரண்போல அணிவகுத்து வந்தன.

    டாக்கா நகரில் உள்ள ஹஸ்ரத் ஷாஜாலால் விமான நிலையத்தில் சீன அதிபர் வந்த விமானம் தரையிறங்கிய பின்னர் க்சி ஜின்பிங் விமானத்தை விட்டு வெளியே இறங்கியபோது 21 குண்டுகள் முழங்க அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    க்சி ஜின்பிங்குக்கு வங்காளதேச அதிபர் அப்துல் ஹமித் மலர்கொத்து அளித்து வரவேற்று, முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசும் க்சி ஜின்பிங், இருநாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளைப் பற்றி விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    அதிபர் அப்துல் ஹமித் வசிக்கும் பங்காபாபன் அரண்மனையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் அவர் நாளை காலை கோவா நகருக்கு புறப்படுகிறார்.
    Next Story
    ×