search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தல்காரர்களை முற்றிலும் சுட்டுக்கொல்ல உத்தரவு: அதிபர் அதிரடி நடவடிக்கை
    X

    பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தல்காரர்களை முற்றிலும் சுட்டுக்கொல்ல உத்தரவு: அதிபர் அதிரடி நடவடிக்கை

    பிலிப்பைன்சில் இன்னும் 6 மாதத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் உத்தரவிட்டுள்ளார்.
    மணிலா:

    பிலிப்பைன்சில் இன்னும் 6 மாதத்தில் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடெர்ட் பதவி வகிக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இவர் மேயர் ஆக பதவி வகித்தார்.

    இவர் அதிபராக பதவி ஏற்றவுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். முன்னதாக போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்த்து பொது மக்கள் போராட வேண்டும். கடத்தல்காரர்களை சுட்டுக்கொல்ல பொது மக்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவற்றை பதுக்குபவர்கள், விற்பவர்கள் என அனைவரையும் சுட்டுத்தள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய போலீசார் 6 மாதத்தில் 3 ஆயிரம் பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

    இந்த நிலையில் எஞ்சியிருக்கும் போதை பொருள் கடத்தல்காரர்களையும் ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி இன்னும் 6 மாதத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்று அழிக்க உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ரோட்ரிகோ டுடெர்ட் அமோக வெற்றி பெற்றார். அப்போதே பிலிப்பைன்சில் இருக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்களை அழிக்க சபதம் மேற்கொண்டார். 
    Next Story
    ×