என் மலர்

    செய்திகள்

    தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம்: ஜப்பான், ரஷ்யா உறுதி
    X

    தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம்: ஜப்பான், ரஷ்யா உறுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், ரஷ்யா நாடுகள், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது.
    டோக்கியா:

    இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளன.

    அந்த வகையில், உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், ரஷ்யா நாடுகள், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஜப்பான் அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

    அனைத்துவிதமான தீவிரவாதத்தையும், அது எந்த நோக்கத்திற்காக செயல்பாட்டாலும் அதனை ஜப்பான் கண்டிக்கிறது. எந்தவொரு தீவிரவாதத்தின் செயல்பாடுகளையும் நியாயப்படுத்த முடியாது என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இதயப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    அதேபோல், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
    Next Story
    ×