search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பான் கி மூன் கண்டனம்
    X

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பான் கி மூன் கண்டனம்

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 17 ராணுவ வீரர்களின் உயிரை பறித்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 17 ராணுவ வீரர்களின் உயிரை பறித்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உரி தாக்குதல் தொடர்பான செய்திகளை மிக நெருக்கமாக கவனித்து வரும் ஐக்கிய நாடுகள் சபை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேற்கொண்டு இதுபோன்ற உயிரிழப்புகள் நேராத வகையில் அங்கு நிரந்தரத்தன்மையை பாதுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நம்புகிறோம்.

    இந்த தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×