என் மலர்
செய்திகள்

பாகிஸ்தானில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிர் இழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெஷாவர் நகரின் புறநகர் கர்ஹி சோப்பாத் கான். அங்குள்ள ராணுவ பால் பண்ணையில் நேற்று காலை 3 வீரர்கள் அதிகாரிகளுக்கு பால் வாங்கிக்கொண்டு ஒரு தனியார் வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாகனத்தை துப்பாக்கி ஏந்திய நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வீரர்களும் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.
இந்த தாக்குதல் குறித்து தாத் முகமது என்ற போலீஸ் அதிகாரி கூறும்போது, “இந்தப் பகுதியில் நடந்துள்ள 2-வது தாக்குதல் இது” என குறிப்பிட்டார். சம்பவம் நடந்துள்ள பகுதியில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே அவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதே பகுதியில்தான் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றதும், அதில் 36 பேர் கொன்று குவிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

Next Story