என் மலர்

  செய்திகள்

  பிரேசிலில் சோப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர் ஆற்றில் மூழ்கி பலி
  X

  பிரேசிலில் சோப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர் ஆற்றில் மூழ்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேசிலில் சோப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர் ஆற்றில் மூழ்கி பலியானார்.
  ரியோ டி ஜெனீரோ:

  பிரேசிலை சேர்ந்த பிரபல நடிகர் டோமிங் கோஸ் மாண்டேக்னெர். இவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்தார். அதற்கான படப்பிடிப்பு செர்ஜிப் மாகாணத்தில் கானின்டே நகரில் ஓடும் சாவ் பிரான் சிஸ்கோ ஆற்றில் நடந்தது.

  அவருடன் நடிகை கமீலா பிடாங்கா என்பவரும் நடித்தார். இருவரும் சோப்பு போட்டு ஆற்றில் குளிப்பது போன்ற காட்சி படமானது. அதற்காக நடிகர் டோமிங்கோஸ் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தார்.

  அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. எனவே நடிகர் டோமிங்கோஸ், நடிகை கமீலா ஆகிய இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

  இதற்கிடையே கமீலா ஒரு பாறையை பிடித்து ஒதுங்கினார். அவரை படக் குழுவினர் காப்பாற்றி விட்டனர். ஆனால் டோங்கோசை காணவில்லை. அவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் பல மணி நேரம் கழித்து 2 பாறைகளுக்கு இடையே சிக்கி கிடந்த அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டது.
  Next Story
  ×