என் மலர்

  செய்திகள்

  தென்சீனக் கடலில் பங்களிப்பை அதிகரிக்கும் ஜப்பான்: அமெரிக்காவுடன் இணைந்து ரோந்து
  X

  தென்சீனக் கடலில் பங்களிப்பை அதிகரிக்கும் ஜப்பான்: அமெரிக்காவுடன் இணைந்து ரோந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், தனது பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
  வாஷிங்டன்:

  தென்சீனக்கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன.

  இந்த அதிகார மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை சீனா நிராகரித்தாலும், சீனாவுக்கு இது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

  இந்த சூழ்நிலையில் தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. அதாவது பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக ஜப்பான் ராணுவ மந்திரி டொமோமி இனடா வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சீனா, கிழக்கு சீனக்கடலிலும், தென் சீனக்கடலிலும் தனது செயல்களால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தை தாண்டி கவலையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறது என்று விளக்கினார்.

  ‘எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காக்க ஜப்பான் அரசு உறுதி கொண்டுள்ளது. அந்த வகையில், நாங்கள் எங்கள் சொந்த பாதுகாப்பு முயற்சிகளை தொடர முடிவு செய்துள்ளோம். ஜப்பான், அமெரிக்கா கூட்டினை பராமரிக்கவும், மேலும் பலப்படுத்தவும் தீர்மானித்திருக்கிறோம். தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ரோந்துப்பணியை மேற்கொள்ள ஜப்பான் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் விவகாரத்தில் ஜப்பான் தன் பங்களிப்பை அதிகப்படுத்துகிறது.

  அதன் ஒரு அம்சமாக பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட நாடுகளுக்கு ஜப்பான் ராணுவ உதவி வழங்கும். அமெரிக்கா தனது கடற்படை மற்றும் விமானப்படையின் 60 சதவீதத்தை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 2020-ம் ஆண்டுக்குள் நிறுத்தும் திட்டத்தை ஜப்பான் வரவேற்கிறது’ என்றார் டொமோமி இனடா.
  Next Story
  ×