என் மலர்

    செய்திகள்

    உடல்நலம் தேறிய ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினாவில் பிரசாரம்
    X

    உடல்நலம் தேறிய ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினாவில் பிரசாரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.

    இவர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடந்த 11-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. மன்ஹாட்டன் பகுதியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. எனவே, அவரை டாக்டர் பர்டாக் பரிசோதித்தார். அப்போது அவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும், அதன் காரணமாக நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஹலாரி கிளிண்டனின் உடல் நலக்குறைவு வீடியோ காட்சிகள் டி.விக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பானது, நியூயார்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் உதவியாளர்களால் கைத்தாங்கலாக வேனுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    எனவே, ஹிலாரி கிளிண்டன் நன்றாக ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். அதைதொடர்ந்து அவர் நியூயார்க்கில் உள்ள தனது மகள் செல்சியாவின் வீட்டிலும், பின்னர், தனது வீட்டிலும் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

    இதையடுத்து, 12-ம் தேதி கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹிலாரியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

    அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொண்டர்கள் சாதகமாக பயன்படுத்தி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூயார்க் நிகழ்ச்சியின்போது திடீர் உடல்நலக் குறைவால் நிலைதடுமாறிய ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கிரீன்ஸ்போரோ பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் கூட்டத்தில் நேற்று பங்கேற்று, ஒன்றிணைந்த வலிமையான அமெரிக்கா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் தொற்றுக்கு உரிய சிகிச்சை பெற்று, அந்நோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை தனக்குள் இருந்ததால், தனது உடல்நலக்குறைவு தொடர்பாக பகிரங்கமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×