search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக் டிக்கெட்களை பிளாக்கில் விற்ற ஐரோப்பிய ஒலிம்பிக் கமிட்டி முன்னாள் தலைவர் விடுதலை
    X

    ரியோ ஒலிம்பிக் டிக்கெட்களை பிளாக்கில் விற்ற ஐரோப்பிய ஒலிம்பிக் கமிட்டி முன்னாள் தலைவர் விடுதலை

    ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ள மார்க்கெட்டில் (பிளாக்கில்) விற்றதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
    ரியோ டி ஜெனீரோ:

    ஐரோப்பிய நாடுகளுக்கான ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக முன்னர் பதவி வகித்தவர் பேட்ரிக் ஹிக்கி(71). அயர்லாந்து நாட்டை சேர்ந்த இவர், அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவராகவும் முன்னர் பதவி வகித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிரந்தர உறுப்பினராக தற்போது உள்ளார்.

    இந்நிலையில், ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை காணவந்த இவர், அயர்லாந்து நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியினருக்கு அளிக்கப்பட்டிருந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்று, பணஆதாயம் அடைந்ததாக ரியோ ஒலிம்பிக் குழுவினருக்கு ஆதாரங்களுடன் தகவல் வந்தது.

    இதன் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த பேட்ரிக்கை கடந்த மாதம் 10-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிய பிரபல விளையாட்டு நிறுவனத்தை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் இங்குள்ள பாங்கு டென் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில், அவர்கள் இருவரையும் ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடியும்வரை
    ரியோ டி ஜெனீரோ நகரில் தங்கியிருக்கும்படி வலியுறுத்தியுள்ள நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரின் பாஸ்போர்ட்களையும் முடக்கி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×