search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாரத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்
    X

    பிரசாரத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்

    வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லோட் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, பிரசாரத்தின்போது தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார்.
    சார்லோட்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிற கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 70) சர்ச்சைகளுக்கு இடம் அளிக்கிற வகையில் பேசியும், தனி நபர் விமர்சனம் செய்தும் வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லோட் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, பிரசாரத்தின்போது தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார்.

    அப்போது அவர், “சில நேரங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தின்போது, பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறபோது, நாம் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச முடியாமல் போய் விடுகிறது. அதாவது, தவறான வார்த்தைகளை பேசி விட நேரிடுகிறது. நான் அதைச் செய்திருக்கிறேன். நான் அதற்காக வருந்துகிறேன். குறிப்பாக தனிப்பட்ட முறையில் என் பேச்சால் வேதனை அடைந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என கூறினார்.

    ஆனால் யாரைப்பற்றி, எப்படியெல்லாம் தனிநபர் விமர்சனம் செய்தார் என்பது பற்றி டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை.
       
    Next Story
    ×