என் மலர்

  செய்திகள்

  காஷ்மீர் விவகாரம் குறித்து பேச வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு
  X

  காஷ்மீர் விவகாரம் குறித்து பேச வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
  இஸ்லாம்பாத்:

  காஷ்மீரில் கடந்த மாதம் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக வன்செயல்கள் நடந்து வருகின்றன. இதுவரை 66 பேர் பலியாகி உள்ளனர்.

  இந்த நிலையில், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும், காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இரு நாடுகளுக்கும் சர்வதேச கடமை இருக்கிறது’’ என பாகிஸ்தான் கூறி, வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் அழைப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

  இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரியின் அழைப்புக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

  அதில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ள அவர், ‘‘காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் எந்த வகையிலும் பாகிஸ்தான் தலையிடுவதற்கு தகுதி இல்லை. வேண்டுமானால், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தையும், தீவிரவாதிகள் ஊடுருவலையும் பற்றி விவாதிக்கலாம்’’ என கூறி உள்ளார்.

  இது முறைப்படி பாகிஸ்தானிடம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே மூலமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

  இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் படி இந்த மாத இறுதியில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  எல்லைதாண்டிய பயங்கரவாதத்தையும், தீவிரவாதிகள் ஊடுருவலையும் பற்றி விவாதிக்கலாம் என்ற இந்தியாவின் கோரிக்கையையும் பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

  இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஜெய்சங்கரின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தை திட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி பதில் அளித்துள்ளார். அந்த பதிலுரை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கவுதம் பாம்வாலேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

  Next Story
  ×