என் மலர்

    செய்திகள்

    போலியாக தேர்தல் நிதி: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி.யின் தந்தைக்கு ஓராண்டு சிறை
    X

    போலியாக தேர்தல் நிதி: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி.யின் தந்தைக்கு ஓராண்டு சிறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகனின் தேர்தல் செலவுக்காக முறைகேடான வகையில் பணப் பரிமாற்றம் செய்து பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியதுபோல் போலியான முறையில் கணக்கு காட்டிய இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி.யின் தந்தையான 88 வயது நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கு கடந்த 4-11-2014 அன்று தேர்தல் நடைபெற்றது

    இந்த தேர்தலில், கலிபோர்னியா மாகாணத்தில் 7-வது பாராளுமன்ற மாவட்ட தொகுதியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட டாக்டர் அமி பெரா போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டக் ஓசி என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்த தேர்தலில் அமி பெரா சுமார் 1,400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வம்சாவளி எம்.பி.யான இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மூன்றாவது முறையாகவும் இதே தொகுதியில் போட்டியிட அமி பெரா முயன்று வருகிறார்.

    இந்நிலையில், மகனின் தேர்தல் செலவுக்காக போலியான முறையில் நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் அமி பெராவின் தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அமி பெராவின் தந்தையான பாபுலால் பெரா, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடியேறினார்.

    கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலின்போது, 2010 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையில் 130 நபர்களின் பெயரால் தேர்தல் நிதி பெற்றதுபோல் போலியாக பணப் பரிமாற்றம் செய்ததாக பாபுலால் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதன்மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு முறைகேடான பணப் பரிமாற்றம் செய்து அமெரிக்காவின் தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றத்துக்காக இவர்மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, பாபுலால் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி டிராய் நுன்லே, தற்போது 88 வயதாகும் குற்றவாளி பாலுலால் பெராவுக்கு 366 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

    தந்தையின் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவரும் அமி பெரா, இந்த தீர்ப்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×