என் மலர்

    செய்திகள்

    இங்கிலாந்து குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலை வெளியே தூக்கி வீசி அவமதிப்பு
    X

    இங்கிலாந்து குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலை வெளியே தூக்கி வீசி அவமதிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இங்கிலாந்து குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலை வெளியே தூக்கி எறிந்து அவமதிப்பு நடந்துள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷிர் மண்டலத்தில் பார்க்கரண்டு பகுதியில் கோபிந்த மார்க் என்ற இடத்தில் கோபிந்த சிங் குருத்வாரா என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலம் உள்ளது.

    கடந்த வாரம் 12-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு குருத்வாராவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை பார்த்த போது அந்த வழிபாட்டு தலத்தின் கேட் உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே இருந்த சீக்கியர்களின் புனித நூல் வெளியே தூக்கி வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த அப்பகுதி சீக்கியர்கள் மனவேதனை அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை வெறுக்கத்தக்க குற்றம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குருத்வாராவுக்குள் புகுந்து புனித நூலை தூக்கி வீசிய கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குரு கிரந்த் சாகிப் அவமதிக்கப்பட்டுள்ளதாக மனவேதனை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×