search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலுசிஸ்தான் பற்றிய பேச்சில் மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்
    X

    பலுசிஸ்தான் பற்றிய பேச்சில் மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்

    பலுசிஸ்தான் பற்றிய பேச்சில் இந்திய பிரதமர் மோடி எல்லையை மீறிவிட்டார் என்றும் பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்ப உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் இடம் பெற்று இருந்தது. பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து மோடி கேள்வி எழுப்பினார். அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் கருத்து கூறினார்.

    பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர்.

    மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    பிரதமர் மோடியின் பேச்சால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் பலூச் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

    இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் எழுப்புவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாபீஸ் ஜகாரியா கூறிஉள்ளார்.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அட்டூழியங்களில் ஈடுபடும் விவகாரத்தை பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் எழுப்பியது தொடர்பாக ஜகாரியா பேசுகையில், “இந்திய பிரதமர் மோடி ஐ.நா.வின் வரைமுறையை மீறியுள்ளார், பலுசிஸ்தான் குறித்து பேசி எல்லையை மீறிவிட்டார். ஏற்கனவே நாங்கள் காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் குரல் எழுப்பினோம். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பிரதமர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவார்,” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×