என் மலர்

  செய்திகள்

  போலந்தில் மண்ணில் புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க தோண்டும் பணி தீவிரம்
  X

  போலந்தில் மண்ணில் புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க தோண்டும் பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலந்தில் மண்ணில் புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க பூமியை தோண்டும் பணி தொடங்கியது.
  பொர்ஷா:

  இரண்டாம் உலகப் போரின் போது சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜிப் படைகள் பிறநாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைரநகைகள், போர் ஆயுதங்களுடன் ‘நாஜி’ ரெயில் ஒன்று போலந்தின் சுரங்க பாதையில் சென்று கொண்டிருந்தது.

  இந்த ரெயில் போலந்தில் வால்பிரசிக் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ள க்சியாஷ் கேஸ்டில் என்ற இடத்தில் வந்த போது திடீரென மாயமானது. அப்போது ‘நாஜி’க்களுக்கு கடும் போட்டியாக திகழ்ந்த சோவியத்ரஷியாவின் செம்படை (சிவப்பு படை) வ்ரோகிலோ என்ற இடத்தில் சுரங்க ரெயில் பாதையை மூடிவிட்டது இச்சம்பவம் கடந்த 1945-ம் ஆண்டு நடந்தது.

  அந்த ரெயில் பூமிக்குள் அப்படியே புதைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்துடன் புதைந்து கிடக்கும் ரெயிலை கண்டுபிடித்து மீட்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

  போலந்தை சேர்ந்த பியோடர் கோபர், ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் ரிச்டர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுபட்டனர். பூமிக்குள் கதிர் வீச்சு மூலம் ஸ்கேன் செய்த போது வால்பிரிச் பகுதியில் சுரங்க ரெயில் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  எனவே, அங்கு தங்கத்துடன் புதைந்து கிடக்கும் ரெயிலை மீட்க பூமியை தோண்டும்பணி தொடங்கியது.

  Next Story
  ×