search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் மதரசாவுக்கு 30 கோடி நிதி: பாகிஸ்தான் அடாவடி
    X

    பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் மதரசாவுக்கு 30 கோடி நிதி: பாகிஸ்தான் அடாவடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீவிரவாதிகளின் தோற்றுவாய்களை ஒழித்தழிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில் பாகிஸ்தானின் கைபர்-பக்துங்வா மாகாண அரசு தீவிரவாதிகளை உருவாக்கும் பிரபல மதரசாவுக்கு 30 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர்-பக்துங்வா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தின் அக்கொரா கட்டக் பகுதியில் தாருல் உலூம் ஹக்கானியா என்ற மதரசா கடண்டஹ் 1947-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.  ஹக்கானி தீவிரவாதக்குழுவின் நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானி, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அசிம் உமர், தலிபான்களின் முன்னாள் தலைவர் முல்லா ஒமர் ஆகியோர் இந்த மதரசாவில் பயின்று பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மதரசாவுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு மூன்றாயிரம் பேர் படித்து வருகிறார்கள்.

    மேற்கத்திய ஊடகங்களால் ‘ஜிஹாத் பல்கலைக்கழகம்’ என்றழைக்கப்படும் இந்த மதரசாவின் ஆண்டு செலவினங்களை சரிகட்ட கைபர்-பக்துங்க்வா மாகாணத்தை ஆண்டுவரும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அரசு 30 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    மேற்படி தொகையில் 2016-2017 நிதியாண்டில் 15 கோடி ரூபாயும், அடுத்த நிதியாண்டில் 15 கோடி ரூபாயும் அளிக்கப்படும் என கைபர்-பக்துங்க்வா மாகாண மதவிவகாரகங்களுக்கான மந்திரி ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×