என் மலர்

  செய்திகள்

  சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை
  X

  சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாணத்தில் மருத்துவமனையில் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடைந்த கருக்குழந்தை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
  பெய்ஜிங் :

  சீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்ஸி நகர ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறை பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

  அவற்றில் முதலாவது பிறந்த குழந்தை 2 கிலோ எடை இருந்தது. அடுத்தபடியாக பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்தது. மேலும் வித்தியாசமாகவும் காணப்பட்டது.

  எனவே, அக்குழந்தையை டாக்டர்கள் ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அதில் அக்குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடைந்த கருக்குழந்தை போன்ற உருவம் இருந்தது.

  அதற்கு எலும்புகள் மற்றும் நகங்கள் உள்ளன. அதைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். 5 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு எப்போதாவது ஒருமுறை இது போன்ற அதிசய நிகழ்வு ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
  Next Story
  ×