என் மலர்

    செய்திகள்

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 2 வெளிநாட்டு வீரர்கள் பலி
    X

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 2 வெளிநாட்டு வீரர்கள் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பேர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பலியானார்கள்
    காத்மாண்டு:

    உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வெளிநாட்டு மலையேறும் வீரர்கள் தீவிர ஆர்வமாக உள்ளனர்.

    அவர்கள் நேபாள பகுதியில் உள்ள இமயமலை வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கின்றனர். இந்த நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த எரிக் அர்னால்டு (35) என்பவர் தனது குழுவினருடன் ஏறிக் கொண்டிருந்தார். சுமார் 8,850 மீட்டர் உயரம் ஏறிய அவர் சவித் காலம் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.

    இரவில் அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. உடனே, அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    தற்போது அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 5–வது தடவையாக முயற்சி மேற் கொண்டார். கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் எவரெஸ்ட் சிகரத்திலும் எதிரொலித்தது. அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தார். தற்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

    இவரை போன்று மற்றொரு மலையேறும் வீராங்கனையும் பலியானார். அவரது பெயர் மரியா ஸ்டிரைடோம் (34) ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். எவரெஸ்ட் சிகரத்தல் ஏறிய போது இவரும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடும் பனி காரணமாக ஏற்பட்ட வலிப்பு காரணமாக இவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் உடலை காத்மாண்டுக்கு கொண்டு வர ஏற்பாடு நடைபெறுகிறது.

    Next Story
    ×