என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: சுடப்பட்டவர், தீவிரவாத தாக்குதல் நடத்த வந்தவரா?
  X

  அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: சுடப்பட்டவர், தீவிரவாத தாக்குதல் நடத்த வந்தவரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாஷிங்டன் நகரில் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. சுடப்பட்டவர், தீவிரவாத தாக்குதல் நடத்த வந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
  வாஷிங்டன் :

  வாஷிங்டன் நகரில் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. சுடப்பட்டவர், தீவிரவாத தாக்குதல் நடத்த வந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஜனாதிபதி வசிக்கிற வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் பாதுகாப்பு பொறுப்பும், ஜனாதிபதி ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பும் ரகசிய போலீசார்வசம் உள்ளது. அவர்கள்தான் வெள்ளை மாளிகையையும், அதன் சுற்றுப்புறங்களையும் இரவு பகலாக பாதுகாத்து வருகிறார்கள்.


  ஆனாலும் சமீப காலமாக அந்தப் பகுதியில் பலர் அத்துமீறி நுழைந்து கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இதனால் ரகசிய போலீசார் பணியில் அசட்டையாக இருப்பதாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி), வெள்ளை மாளிகை அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்தார். அவரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ரகசிய போலீசார், அவரை நிற்குமாறும், துப்பாக்கியை கீழே போடுமாறும் எச்சரித்தனர்.

  ஆனால் அவர்களது உத்தரவை ஏற்று அந்த நபர் நிற்கவும் இல்லை. துப்பாக்கியை கீழே போடவும் இல்லை.

  இதனால் அவர் தீவிரவாத தாக்குதல் நடத்த வந்த நபராக இருக்கக்கூடும் என ரகசிய போலீசார் சந்தேகித்தனர். உடனே ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி, அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். அவரது அடிவயிற்றில் குண்டு பாய்ந்தது. குண்டு பாய்ந்ததும் சரிந்து விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து, உள்ளூர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ந்தனர். அவர் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

  இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளை மாளிகை சிறிது நேரம் மூடப்பட்டது.

  சம்பவம் நடந்தபோது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் மேரிலேண்டில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் ‘கோல்ப்’ விளையாடிக்கொண்டிருந்தார்.

  அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஜோ பிடென், வெள்ளை மாளிகை வளாகத்தில்தான் இருந்தார். அவர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

  இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெள்ளை மாளிகையில் அல்லது அதனுடன் இணைந்த பகுதிகளில் யாரும் காயம் அடையவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது” என்றார்.

  இதேபோன்று வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “வெள்ளை மாளிகை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றியும், அந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை மூடப்பட்டது குறித்தும் எனக்கு தகவல்கள் கூறப்பட்டன. எனது பொது பாதுகாப்பு குழுவினர், பெடரல் குழுவினருடன் ஒத்துழைத்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

  துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் வாகனம், 17-வது தெருவில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீசார் சோதனை போட்டபோது அதில் ‘.22 காலிபர்’ ரக துப்பாக்கியும், வெடி மருந்துகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  சுடப்பட்ட நபர் யார், அவரது பின்னணி என்ன, எதற்காக வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கியுடன் வந்தார் என்பது போன்ற விவரங்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வந்தபின்னர்தான் தெரிய வரும் என கூறப்படுகிறது. 
  Next Story
  ×