என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் பிணைக் கைதிகள் தலை துண்டிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ
    X

    ஈராக்கில் பிணைக் கைதிகள் தலை துண்டிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ

    ஈராக்கில் பிணைக் கைதிகளின் தலை துண்டிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
    பாக்தாத்:

    ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் பிணைக் கைதிகளின் தலை துண்டித்து படுகொலை செய்கின்றனர். சமீப காலமாக அச்சம்பவம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பிணைக் கைதிகளின் தலை துண்டிப்பு படுகொலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொள்கை பரப்பு பிரிவு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஈராக் மக்மூர் பகுதியில் குர்து இனத்தைச் சேர்ந்த 3 பிணைக் கைதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் முழங்காலிட்டு மண்டியிட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் கழுத்தில் நீண்ட கத்தியை வைத்தபடி ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்புறம் நிற்கின்றனர். அதை தொடர்ந்து கொலைகாரன் ஒருவன் குர்து மொழியில் எச்சரிக்கை விடுத்து பேசுகிறான். பின்னர் பிணைக் கைதிகளின் தலை துண்டிக்கப்படுகிறது.
    6 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சி பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஈராக்கின் மிகப்பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. தற்போது அதை ராணுவம் மீண்டும் கைப்பற்றிவிட்டது.

    அதை தொடர்ந்து மக்மூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களை ராணுவம் மீட்டுள்ளது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிணைக் கைதிகளை தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்வதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×