search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து: 11 பேர் பலி
    X

    கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து: 11 பேர் பலி

    • சுரங்கத்தினுள் செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைவதாக கவர்னர் நிகோலஸ் கார்சியா கூறியுள்ளார்.
    • கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாக எண்ணெய் மற்றும் நிலக்கரி உள்ளது.

    போகட்:

    கொலம்பியாவில் சுததவுசா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளி ஒருவரின் கருவியில் இருந்து தீப்பொறி பட்டு, அங்கு பரவியிருந்த வாயு தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,mine தீப்பற்றிய பகுதியில் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் அப்பகுதி கவர்னர் நிகோலஸ் கார்சியா தெரிவித்தார்.

    தொழிலாளர்கள் 900 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருப்பதால், அங்கு செல்வது மீட்புக்குழுவினருக்கு கடினமாக பணியாக உள்ளது என்றும், உள்ளே செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாக எண்ணெய் மற்றும் நிலக்கரி உள்ளது. சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×