என் மலர்
உலகம்

இலங்கையில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி: 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
- பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
- உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொழும்பு:
இலங்கை பொலன்ணறுவு கதுருவெலாவில் இருந்து ஒரு தனியார் பஸ் காத்தான் குடிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் குழந்தைகள் உள்பட 70 பேர் பயணம் செய்தனர்.
வழியில் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மரண பயத்தில் அலறினார்கள்.
இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுக்குள் விழுந்த பஸ் பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.






