என் மலர்

  செய்திகள்

  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
  X
  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தென்கிழக்கு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உள்ளது.
  அதிமுக சார்பில் ஏ. கோவிந்தசாமி. திமுக சார்பில் டாக்டர் எம். பிரபு ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் வி. ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், அமமுக சார்பில் பி. பழனியப்பன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  அதிமுக வேட்பாளர் ஏ. கோவிந்தசாமி சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 7,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 48,48,232.53
  3. அசையா சொத்து- ரூ. 1,89,00,000

  திமுக வேட்பாளர் எம். பிரபு ராஜசேகர் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 7,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 19,65,928
  3. அசையா சொத்து- ரூ. 2,10,000

  இந்த தொகுதி 1977-ம் ஆண்டு முதல் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்து வந்தது. பின்பு தொகுதி சீரமைப்பு நடவடிக்கையில் 2011-ம்ஆண்டு முதல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியாக மாறியது.

  பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி உருவான 2011 ஆண்டு முதல் 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. 3 முறையும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.

  இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 417 பேர் அடங்குவர். இதில் ஆண் வாக்காளர்கள் 1. 30.573 பேர் . பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1. 28.814 பேர் . 3&ம் பாலினத்தவர் யாரும் இல்லை.
  இந்த தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பொ.மல்லாபுரம், கடத்தூர் என 3 பேரூராட்சிகள், 19 கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

  இந்த சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழில் விவசாயம், சிறு தானியங்கள், நெல், கரும்பு, வாழை, பாக்கு, மர வள்ளி கிழங்கு, கடலை, வெற்றிலை, பூ போன்றவை பயிரிடப்படுகின்றது.

  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

  நீர் பாசனத்திற்கு சேர்வராயன் மலையில் இருந்து வரும் வாணியாறு நீர் தேக்க தண்ணீர் மட்டுமே. மீதி தேவையை நிலத்தடியில் கிணறு, ஆழ்துளை மூலம் தண்ணீர் பாசனம் பெறுகிறது.

  கோரிக்கைகள்

  விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை வாணியாறு நீர்தேக்கத்தின் இடது வலதுபுற கால்வாய் நீட்டிக்க வேண்டும் என்பதும், பொம்மிடி அருகே உள்ள வேப்பாடி அணை கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆகும்.
  இங்கு விளையும் வாழை, பாக்கு, தேங்காய். வெற்றிலை தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை.

  மக்களின் மாற்று தொழில் தின கூலிகளாக பெங்களூரு, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு பிழைப்பு தேடி செல்கின்றனர். எந்த தொழிற்சாலைகளும் இல்லை. தினமும் பொம்மிடி சுற்றுப்புற கிராம மக்கள் அன்றாட வேலைக்காக ரெயில் மூலம் பல ஆயிரம் பேர் சேலம் நோக்கி வேலைக்கு செல்கின்றனர்.

  பாப்பிரெட்டிப் பட்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. இருப்பினும் அவசர காலங்களில் விபத்தில் உயிர்காக்க 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே தரம் உயர்ந்த மருத்துவ வசதியுடன் கூடிய மருத்துவமனை அவசியம் என இந்த தொகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  இந்த பாப்பிரெட்டிப் பட்டியில் சுற்றுலாதலமாக வாணியாறு அணை உள்ளது. அடுத்தது தென்கரை கோட்டை நாயக்கர் கால மண்கோட்டை உள்ளது. தற்போது இது மிகவும் பழுதடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது.

  இதேபோல் பொம்மிடி அருகே உள்ள சேர்வராயன் வேப்பாடி அணை கட்டு பகுதியும் சுற்றுலா தலமாக உள்ளது. இந்த பகுதிக்கு ஏற்காடு செல்பவர்கள் இந்த இடத்தை பார்த்து விட்டு செல்வர். அடிப்படை வசதியான குடிநீர் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக செல்ல வில்லை. இந்த தொகுதியில் பஸ் வசதி இல்லாத கிராமங்கள் உள்ளன.

  சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கும். பொம்மிடியில் இருந்து கொண்டகரஹள்ளி, இலளிகம். நல்லம்பள்ளி வழியாக வும் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.

  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களின் அன்றாட தேவைகளான பஸ் வசதி, சீரான குடிநீர் வினியோகம், தரமான மருத்துவமனைகள். புதிய நீர்நிலைகளை உருவாக்குவது.வெளி மாவட்டம். வெளி மாநிலம் செல்லும் கூலி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலை, சுற்றுலா தலங்கள் சீரமைப்பு பஸ் வசதி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் வகையில் கிடங்குகள் போன்ற பிரச்சனைகளுடனும் தேவைகளுடனும் தேர்தலை எதிர்நோக்கி வருகிறது.

  இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

  1977 குப்புசாமி (அ.தி.மு.க).
  1980 குப்புசாமி (அ.தி.மு.க.).
  1984 தீர்த்தகிரி கவுண்டர் (காங்).
  1989 முல்லைவேந்தன்&(தி.மு.க.).
  1991 சிங்காரம் &(அ.தி.மு.க.)
  1996 முல்லைவேந்தன்& (தி.மு.க.)
  2001 பழனியப்பன் (அ.தி.மு.க.).
  2006 முல்லைவேந்தன் (தி.மு.க.).
  2011 பழனியப்பன் (அ.தி.மு.க.)
  2016 பழனியப்பன் (அ.தி.மு.க)
  2019 (இடைத்தேர்தல்) கோவிந்தசாமி (அ.தி.மு.க.).

  2019 இடைத்தேர்தல்

  ஏ. கோவிந்தசாமி (அ.தி.மு.க)- 1,03,981
  மணி (தி.மு.க.)- 85,488
  ராஜேந்திரன் (அ.ம.மு.க.)-15,283
  சதீஷ் (நாம் தமிழர் கட்சி)- 3783
  Next Story
  ×