search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு தொகுதி
    X
    ஒரத்தநாடு தொகுதி

    ஒரத்தநாடு தொகுதி கண்ணோட்டம்

    ஆர். வைத்திலிங்கமும், எம். ராமச்சந்திரனும் மீண்டும் நேருக்குநேர் களம் காணும் ஒரத்தநாடு தொகுதி கண்ணோட்டம்.
    ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் மிகவும் பிரபலமான தொகுதியாகும். இங்குள்ள மக்கள் அரசியல் மற்றும் அரசு துறைகளில் சாதனை படைத்திருந்தாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்பாள்சத்திரம் உலக பிரசித்திபெற்றதாகும்.

    இங்குதான் மராட்டிய மன்னர்கள், ராஜராஜசோழன் போன்ற மன்னர்கள் ஆட்சியின்போது செய்து தங்கியிருந்த முக்கிய நகரம் இது. ஒரத்தநாட்டில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் முத்தம்பாள் சத்திரத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரி, கால்நடைதுறை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, கால்நடைகளுக்கான மூலிகை பண்ணை போன்றவைகள் முக்கியமானதாகும்.

    ஒரத்தநாடு தொகுதி

    ஒரத்தநாடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து, 43 ஆயிரத்து 7 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 812 பேரும், பெண்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 892 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் உள்ளனர்.

    முதன் முதலில் இங்கு 1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எல்.கணேசன் வெற்றி பெற்றார்.

    தி.மு.க.வில் ஒரத்தநாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இதுவரை அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    ஒரத்தநாடு தொகுதி

    அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து வெள்ளுர் வீராச்சாமி, அழகு திருநாவுக்கரசு, ஆர். வைத்திலிங்கம் என மூன்று பேருக்கு அமைச்சர் பதவி அ.தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.  ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது.

    ஒரத்தநாடு தொகுதி

    இந்த தொகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்கள் என்றால் தென்னமநாடு, கண்ணந்தங்குடி, பின்னையூர் ஆகும். ஒரத்தநாடு தொகுதியை பொறுத்தவரை கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் தலித், கோனார், முத்தரையர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.

    இந்த தொகுதியில் நெல், கடலை, உளுந்து, எள், தென்னை போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிட்டு சாதனை படைத்த பெருமை இந்த மண்ணிற்கு உண்டு.

    கோரிக்கைகள்

    ஒரத்தநாடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் எந்திரமும், ஆலையும் வேண்டும். பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டும், பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்கபட வேண்டும்.

    ஒரத்தநாடு தொகுதி

    அரசு மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும். அரசு சார்பில் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க வேண்டும், பொது மக்களின் பயன்பாட்டிற்கு பொது கழிப்பிடம் கட்டி கொடுக்க வேண்டும், கருவூலத்தை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

    ஒரத்தநாடு தொகுதி

    அதிமுக சார்பில் ஆர். வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்திருந்தார். திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் எம். ராமச்சந்திரன் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    ஒரத்தநாடு தொகுதி

    1967 எல்.கணேசன் (தி.மு.க.)
    1971 எல்.கணேசன் (தி.மு.க.)
    1977 தைலப்பன் (தி.மு.க)
    1980 டி.வீராச்சாமி (காங்கிரஸ்)
    1984 டி.வீராச்சாமி (அ.தி.மு.க)
    1989 டி.வீராச்சாமி (அ.தி.மு.க)
    1991 அழகு திருநாவுக்கரசு (அ.தி.மு.க) 
    1996 ராஜமாணிக்கம் (தி.மு.க)
    2001 ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க)
    2006 ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க) 
    2011 ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க)
    2016 எம். ராமசந்திரன் (தி.மு.க)
    Next Story
    ×