search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலம் தொகுதி
    X
    நன்னிலம் தொகுதி

    நன்னிலம் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் போட்டியிடும் நிலையில், திமுக சார்பில் ஜோதிராமன் நிறுத்தப்பட்டுள்ளார்.
    சொத்து மதிப்பு

    காமராஜ்

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 92,30,903.52
    3. அசையா சொத்து- ரூ. 82,41,310

    ஜோதிராமன்

    1. கையிருப்பு- ரூ. 10,000
    2. அசையும் சொத்து- ரூ. 11.15,857.02
    3. அசையா சொத்து- ரூ. 52,00,000

    நன்னிலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகும். இங்கு 80 சதவீதம் பேர் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமாயண காலத்தில் சீதை இங்கு வந்தபோது இது நல்ல நிலம் என்று பெயரிட்டார்.

    நன்னிலம் தொகுதி

    அதுவே நாளடைவில் மருவி நன்னிலம் என்று பெயரானது என்று கூறப்படுகிறது. ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சரஸ்வதி கோவில், ஷ்ரீவாஞ்சியம் எமதர்மராஜா கோயில் உள்ளது. மேலும் நவக்கிரகத் தலங்களில் ஒன்றான ஆலங்குடி குருபகவானும், ராகு- கேது தலமாக விளங்கும் திருப்பாப்புரமும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

    முப்போகம் சாகுபடி செய்யும் பூமியாக விளங்குகிறது. இதைத் தவிர பருத்தி, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து வகைப் பயிர்களும் சாகுபடி செய்வது நன்னிலம் தொகுதியின் சிறப்பம்சமாகும்.

    நன்னிலம் தொகுதி

    நன்னிலம் தொகுதியில் நன்னிலம், வலங்கைமான், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய 4 பேரூராட்சிகளும், 147 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.

    நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 283 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 159 பேரும், இதர வாக்காளர்கள் 24 பேரும் உள்ளனர்.

    நன்னிலம் தொகுதி

    இங்கு முதன் முதலில் 1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதுவரை நடந்து முடிந்த 10 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும், த.மா.கா. 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    இத்தொகுதி மக்கள் நன்னிலம் அல்லது தொகுதியில் வேறு பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசு வேளாண் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். கரும்பு அதிகமாக பயிரிடப்படுவதால் அரசு சர்க்கரை ஆலை தொடங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் மேனாங்குடி கிராமத்தில் சுடுகாடு பாதை அமைத்து தர வேண்டும்.

    நன்னிலம் தொகுதி

    குறிப்பாக நன்னிலம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதேபோல் பஞ்சு ஆலை அமைக்க வேண்டும், பேப்பர், கயிறு தொழிற்சாலை தொடங்க வேண்டும், பேரளத்தில் சாலைகளை சீரமைத்து ரயில்வே மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகள் தொகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

    நன்னிலம் தொகுதி

    அதிமுக சார்பில் மீண்டும் ஆர்.காமராஜ் களம் காண்கிறார். திமுக சார்பில் ஜோதிராமன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    நன்னிலம் தொகுதி
    நன்னிலம் தொகுதி

    2016 ஆர். காமராஜ் (அ.தி.மு.க)
    2011 ஆர். காமராஜ் (அ.தி.மு.க)
    2006 பத்மாவதி (இ.கம்யூனிஸ்ட்)
    2001 தமிழரசன் (த.மா.கா)
    1996 பத்மா (த.மா.கா)
    1991 கோபால் (அ.தி.மு.க)
    1989 மணிமாறன் (தி.மு.க)
    1984 மணிமாறன் (தி.மு.க)
    1980 கலையரசன் (அ.தி.மு.க)
    1977 மணிமாறன் (தி.மு.க)
    Next Story
    ×