search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகப்பட்டினம் தொகுதி
    X
    நாகப்பட்டினம் தொகுதி

    நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதும் நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்.
    சொத்தி மதிப்பு

    தங்க.கதிரவன்

    1. கையிருப்பு- ரூ. 4,50,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,55,49,712
    3. அசையா சொத்து- ரூ. 96,00,000

    நாகப்பட்டினம் வட்டத்தில் நாகை, திருமருகல் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கியது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி என ஒரு பேரூராட்சியும், ஒரு நகராட்சியும் உள்ளன.

    இத்தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை. ஆண்கள்- 95,558, பெண்கள்- 1,01,748, மூன்றாம் பாலித்தவர்- 10. ஆக மொத்தம் 1,97,316 ஆகும்.

    நாகப்பட்டினம் தொகுதி

    இஸ்லாமியர்களின் மிக முக்கிய தலமான நாகூர், இந்துக்களின் முக்கிய தலமான சிக்கல் ஆகியவையும் இந்த சட்டமன்ற தொகுதியில் உள்ளன.

    தொகுதியில் மீன்பிடித் தொழிலே பிரதானமாக உள்ளது. இங்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 5 முறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 முறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

    நாகப்பட்டினம் தொகுதி

    நாகையில் உள்ள அக்கரைப்பேட்டை கிராமத்திற்கு இதுவரை எந்தவித கட்டமைப்பு வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. விவசாய உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தொழிற்சாலைகள் கொண்டு வராததன் காரணமாக மாற்று தொழிலுக்கு வழியில்லாமல் இளைஞர்களும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

    தொன்மை வாய்ந்த நாகை துறைமுகம் கிடப்பில் போடப்பட்டதால் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மும்மதங்கள் சங்கமிக்கும் நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும்.

    துறைமுக நகராக விளக்கும் நாகையில் உள்ள துறைமுகம் வெறும் பெயரளவுக்கே இருக்கிறது. அதனை மேம்படுத்தி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அளவுக்கு கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்படவில்லை. அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தனியார் துறைமுகம் அசுர வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது.

    நாகப்பட்டினம் தொகுதி

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ எதுவும் இங்கு இல்லை. அதனால் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்லுகிறார்கள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள். மீன்பிடித் தொழில் அளவுக்கு விவசாயமும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. விவசாயப் பொருட்களையும், மீன், இரால் உள்ளிட்டவற்றையும் சேமித்து வைக்கவோ, பதப்படுத்தி மதிப்பு கூட்டவோ கட்டமைப்பு வசதிகள் இல்லை.

    நாகப்பட்டினம் தொகுதி

    சாலை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுத்து தடுப்பணை கட்டி கடைமடை பகுதிகளில் பாசனத்திற்கு விடக்கோரும் திட்டம் செயல்படுத்தப்ட வேண்டும்.

    தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருந்த ரயில்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    நாகப்பட்டினம் தொகுதி

    அதிமுக சார்பில் தங்க.கதிரவன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் ஆளூர் ஷா நவாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

    நாகப்பட்டினம் தொகுதி
    நாகப்பட்டினம் தொகுதி

    1977 உமாநாத் (இ.கம்யூனிஸ்ட்)
    1980 உமாநாத் ((இ.கம்யூனிஸ்ட்)
    1984 கோ.வீரையன் (இ.கம்யூனிஸ்ட்)
    1989 கோ.வீரையன் (இ.கம்யூனிஸ்ட்)
    1991 கோடிமாரி (அ.தி.மு.க)
    1996 ஜி.நிஜாமுதீன் (இ.தே.லீக்) (தி.மு.க)
    2001 ஜீவானந்தம் (அ.தி.மு.க)
    2006 கோ.மாரிமுத்து (இ.கம்யூனிஸ்ட்)
    2011 கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க)
    2016 எம். தமீமுன் அன்சாரி (ம.ஜ.க)
    Next Story
    ×