search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி தொகுதி
    X
    மன்னார்குடி தொகுதி

    மன்னார்குடி தொகுதி கண்ணோட்டம்

    தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி. ராஜா திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.
    சொத்து மதிப்பு

    டி.ஆர்.பி. ராஜா

    1. கையிருப்பு- ரூ.5,73,000
    2. அசையும் சொத்து- ரூ. 8,15,33,077
    3. அசையாக சொத்து- ரூ. 60,00,000

    சிவ ராஜமாணிக்கம்

    1. கையிருப்பு- ரூ. 26,000
    2. அசையும் சொத்து- ரூ. 11,69,753

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நகரம் அரசியல், ஆன்மீகம், இயற்கை வளம் என அனைத்திலும் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் ஊராகும். விவசாயம் இவ்வூர் மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.

    மன்னார்குடி தொகுதி

    மன்னார்குடி தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,58, 433 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1,25,304, பெண் வாக்காளர்கள்1,33,118, மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் உள்ளனர்.

    மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் கள்ளர், அகமுடையார், தேவர், வன்னியர், யாதவர்கள், ஆதி திராவிடர் , பிராமணர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், உள்ளிட்ட பிரிவினர் வசிக்கின்றனர்.

    மன்னார்குடி தொகுதி

    மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மன்னார்குடி நகராட்சி தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். இந்த ஊரில் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. ‘திருவாரூர் தேரழகு மன்னார்குடி மதிலழகு’ என்னும் சொலவடை உள்ளது. மேலும் பாப் கட்டிங் செங்கமலம் யானை மன்னார்குடிக்கு மற்றொரு சிறப்பாகும்.

    மன்னார்குடி தொகுதி

    மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மன்னார்குடியை சுற்றியுள்ள வடுவூர் கிராமம் கபடி போட்டியில் பெயர்பெற்ற ஊராகும். அதே ஊரில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை ஈர்த்து கண்களுக்கு விருந்தளிக்கும் கிராமமாகும். மேலும் அங்குள்ள கோதண்டராமர் சுவாமி கோவில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

    மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் உர ஆலை மற்றும் மன்னார்குடி ரெயில் நிலையத்திலிருந்து சரக்கு ரெயில் சேவை இப்பகுதி மக்களின் வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளது. திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன்னார்குடியில் அமைந்துள்ளது.

    மன்னார்குடி தொகுதி

    நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி நெல் மூட்டைகளாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைகின்றனர். 

    மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 6 முறை நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு முறையும், தி.மு.க 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும்வெற்றி பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள்

    நீடாமங்கலம் பகுதியில் 4 ரெயில் வழித்தடங்கள் இருப்பதால் சாலையின் நடுவே செல்லும் ரயில் தண்டவாளத்தை தஞ்சை, நாகை, திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து செல்வதால் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் மற்றும் பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    மன்னார்குடியை சுற்றுலாதலமாக அமைக்க வேண்டும். மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் பாதை பணிகளை தொடங்க வேண்டும். மன்னார்குடியை மிகத் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

    மன்னார்குடி தொகுதி

    பாமணி உர ஆலையை மேம்படுத்தி முழுமையாக செயல்படுத்தி அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். மன்னார்குடி பகுதி மக்களிடையே வேளாண்மை கல்லூரி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி அமைக்க. வேண்டும் என்றும் கோரிக்கை இருந்து வருகிறது.

    அதிமுக சார்பில் சிவ ராஜமாணிக்கம் களம் காண்கிறார். திமுக சார்பில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் டி.ஆர். பி.ராஜா மீண்டும் களம் காண்கிறார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    மன்னார்குடி தொகுதி
    மன்னார்குடி தொகுதி

    1977 அம்பிகாபதி (சி.பி.ஐ) 
    1980 அம்பிகாபதி (சி.பி.ஐ) 
    1984 ஞானசுந்தரம் (அ.தி.மு.க)
    1989 ராமச்சந்திரன் (தி.மு.க)
    1991 சீனிவாசன் (அ.தி.மு.க)
    1996 சிவபுண்ணியம் (சி.பி.ஐ)
    2001 சிவபுண்ணியம் (சி.பி.ஐ)
    2016 டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க)
    2016 சிவபுண்ணியம் (சி.பி.ஐ)
    2011 டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க)
    2016 டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க)
    Next Story
    ×