என் மலர்
செய்திகள்

முகேஷ் அம்பானி
அடுத்த ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் - முகேஷ் அம்பானி தகவல்
5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையான 5ஜி சேவை உரிய நேரத்தில் அறிமுகமாக ஒன்றுபட்டு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி நேற்று கூறினார்.
இதற்கிடையே, 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
5ஜி நெட்வொர்க் சேவையை அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் அறிமுகப்படுத்துவதில் ஜியோ முன்னோடியாக இருக்கும். இதை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும், மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கும் கொள்கைரீதியான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஜியோவின் 5ஜி சேவை, முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும். அச்சேவை, தற்சார்பு இந்தியாவை அடைய உதவும். 5ஜி சேவையால், நான்காம் தொழிற்புரட்சியில் இந்தியா பங்கேற்பதுடன், அதற்கு தலைமை தாங்கும். நிச்சயமாக ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story