search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
    X

    குறைந்த விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேன்ட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 45 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #BSNL
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் கிடைக்கும் புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோருக்கு புது சலுகையை பயன்படுத்த முடியாது.

    புது அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 ஜி.பி. டேட்டாவினை நொடிக்கு 8 எம்.பி. (8Mbps) வேகத்தில் வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் பயனர்கள் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்த முடியும். தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி. (1Mbps) ஆக குறைக்கப்படும்.

    1 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுவதால் இந்த சலுகை பிராட்பேன்ட் பயனர்களுக்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இதனை பி.எஸ்.என்.எல். இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


    பிராட்பேன்ட் மட்டுமின்றி அந்நிறுவனம் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. எனினும் இந்த வசதி உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வெறும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே வழங்குகிறது.

    மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.300 மதிப்புள்ள இலவச அழைப்புகளை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. இத்துடன் வார நாட்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச வாய்ஸ் கால்களும், ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

    இதுமட்டுமின்றி பயனர்களுக்கு மாதம் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புது சலுகை பி.எஸ்.என்.எல். நிறுவன ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து மூன்று மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.  #BSNL
    Next Story
    ×