search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்டெல் டிவிக்கு போட்டியாக ஜியோ டிடிஎச்: விலை மற்றும் சிறப்பு திட்டங்கள் விரைவில் வெளியீடு
    X

    ஏர்டெல் டிவிக்கு போட்டியாக ஜியோ டிடிஎச்: விலை மற்றும் சிறப்பு திட்டங்கள் விரைவில் வெளியீடு

    ஏர்டெல் டிவி சேவை அறிமுகமான சில தினங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    ஏர்டெல் டிவி எனும் புதிய சேவை சமீபத்தில் வெளியிடப்பட்டது, ரூ.4,999 விலைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய டிடிஎச் சேவையில் இணைய வசதி மற்றும் பல்வேறு ஸ்மார்ட் டிவி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வெளியீட்டிற்கு முன்பே ஜியோ டிடிஎச் சேவைகள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது. 

    இந்நிலையில், ஜியோ டிடிஎச் சேவை சார்ந்த தகவல்கள் மற்றும் சிறப்பு சலுகை திட்டங்கள் வெளியாகியுள்ளது. ஜியோ செட் டாப் பாக்ஸ்-இல் 432 சேனல்களும் இதில் 350 சேனல்கள் சாதாரண எஸ்டி தரத்திலும் 50க்கும் அதிகமான சேனல்கள் 4K ரெசல்யூஷன் கொண்ட எச்டி தரத்திலும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை போன்றே ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவைக்கும் அறிமுக சலுகை போன்ற திட்டங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ போன்றே முதல் ஆறு மாதங்களுக்கு இலவச டிடிஎச் சேவைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 



    ஜியோ டிடிஎச் திட்டங்கள்:

    தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஜியோ டிடிஎச் சேவைகளின் கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன் படி, 
    • ஜியோ டிடிஎச் பேசிக் ஹோம் பேக்
    • ஜியோ சில்வர் டிடிஎச் பிளான்
    • ஜியோ டிடிஎச் கோல்டு பேக்
    • ஜியோ பிளாட்டினம் பேக் ஃபார் டிடிஎச்
    • ஜியோ டிடிஎச் மை பிளான்ஸ் (இதில் உங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும்)

    உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஜியோ டிடிஎச் விலைப்பட்டியல்:

    ஜியோ டிடிஎச் சேவையில் சாதாரண பேக் துவக்க விலை ரூ.49 முதல் ரூ.55 வரை துவங்கி அதிகபட்சம் ரூ.200 முதல் ரூ.250 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து விளையாட்டு சேனல்கள் (எச்டி): ரூ.60 முதல் ரூ.69 வரையிலும், வேல்யூ பிரைம் சேனல்கள்: ரூ.120 முதல் ரூ.150 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    தென்னிந்திய வாடிக்கையாளர்களுக்கு என சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.120 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.250 வரை நிர்ணயம் செய்யப்படலாம். ஒவ்வொரு திட்டங்களிலும் மற்ற டிடிஎச் சேவைகளை போன்றே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சேனல்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



    ஜியோ டிடிஎச் போர்ட்கள்:

    ஏற்கனவே இணையத்தில் வெளியான புகைப்படங்களில் ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸ்-இல் எச்டிஎம்ஐ போர்ட், 4K வீடியோ ரெக்கார்டிங், வை-பை, ப்ளூடூத், கூகுள் குரோம் காஸ்டிங், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 

    இதே போன்ற அம்சங்கள் ஏர்டெல் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஏர்டெல் டிவி செட் டாப் பாக்ஸ்-இலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜியோ டிடிஎச் விலை ஏர்டெல் நிர்ணயம் செய்திருப்பதை விடவும், மற்ற சேவைகளைவிடவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     


    ஜியோ போட்டி:

    ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைகள் முதல் சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதை தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பது ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது தெரிந்து கொள்ள முடியும். 

    தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவைகள் முதற்கட்டமாக நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் வழங்கப்படலாம் என்றும் இதற்கான சோதனைகள் மும்பை நகரில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

    மேலும் ஜியோ சேவைகளுக்கென பிரத்தியேகமாக லைஃப் பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்ட நிலையில், செட் டாப் பாக்ஸ் சேவைகளுக்கும் பிரத்தியேக தொலைக்காட்சி பெட்டிகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய சந்தையில் ஜியோ டிடிஎச் சேவைகள் மே மாத துவக்கத்திலோ அல்லது அதன் பின்னரோ வெளியிடப்படும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×