என் மலர்

  செய்திகள்

  ஐடியா பயனர்களுக்கு ஐடியா செலக்ட் பெயரில் சிறப்பு சலுகை அறிவிப்பு
  X

  ஐடியா பயனர்களுக்கு 'ஐடியா செலக்ட்' பெயரில் சிறப்பு சலுகை அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐடியா நிறுவனத்தின் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா செலக்ட் எனும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பலன்களை பற்றி இங்கு பார்ப்போம்.
  புதுடெல்லி:

  இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் புதிய சலுகை திட்டத்தினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஐடியா செலக்ட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  ஐடியா வாடிக்கையாளர் சேவை அதிகாரி மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஐடியா செலக்ட் பயனர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இதோடு மாதந்தோரும் வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கு ஏற்ப வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்டவற்றில் பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படும்.   மேலும் சர்வதேச ரோமிங் மற்றும் அழைப்புகளின் போது எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை மை ஐடியா செயலியின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் புதிய சலுகையை அறிவித்தன. பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஐடியாவின் புதிய சலுகை போஸ்ட்பெயிட் மற்றும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×