என் மலர்
செய்திகள்

ஒரே கிளிக்கில் 30 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி வரை இலவச 4ஜி டேட்டாவினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சிறப்பு சலுகை மற்றும் இலவசங்களை அறிவித்து வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகைக்கு சிறப்பு சலுகையை வழங்குவதாக ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் தலைமை செயல் அதிகதாரி ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி டேட்டாவினை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ஒரே கிளிக் செய்தால் போதுமானது.
மைஏர்டெல் செயலியில் (MyAritel) காணப்படும் விளம்பரத்தை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே அளவு இலவச டேட்டா வழங்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் புதிய சலுகையின் படி அதிகபட்சம் 30 ஜிபி வரை இலவச டேட்டா பெற முடியும். மூன்று மாத வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் மாதம் 10 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும்.

உங்களுக்கு ஏர்டெல் இலவச சேவை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய ஏர்டெல் சார்பில் குறுந்தகவல் அனுப்பப்படும். இதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இலவச சேவையை பயன்படுத்த துவங்கலாம். இதே சலுகை மைஏர்டெல் செயலியின் அறிமுக திரையிலேயே காணப்படுகிறது.
ஏர்டெல் வழங்கி வரும் இலவச டேட்டா சலுகைகள் ஜியோவின் பிரைம் திட்டத்திற்கு போட்டியாகவே அறிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.145 மற்றும் ரூ.325 விலையில் இரண்டு திட்டங்களை ஏர்டெல் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Next Story