என் மலர்

    செய்திகள்

    ரிலையன்ஸ் ஜியோ கட்டணம்: போட்டியாளர்களை விட 20% கூடுதல் டேட்டா அறிவிப்பு
    X

    ரிலையன்ஸ் ஜியோ கட்டணம்: போட்டியாளர்களை விட 20% கூடுதல் டேட்டா அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரிலையன்ஸ் ஜியோ சேவைகளுக்கான கட்டணங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் நிலையில் இவற்றுக்கான கட்டண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜியோ மற்ற நிறுவனங்களை விட 20% கூடுதல் டேட்டா வழங்குகிறது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட 170 நாட்களிலேயே 10 கோடி பேர் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனை இன்று அறிவித்த ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி புதிய ஜியோ பிரைம் எனும் புதிய திட்டத்தை அறிவித்தார். புதிய ஜியோ பிரைம் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் ஜியோ புத்தாண்டு சலுகையினை கூடுதலாக 12 மாதங்களுக்கு ரூ.303 என்ற கட்டணம் செலுத்தி பெற முடியும். 

    புதிய ஜியோ பிரைம் திட்டத்தின் மூலம் அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், மெசேஞ்கள் மற்றும் இதர சேவைகளை நாள் ஒன்றிற்கு ரூ.10 என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ பிரைம் திட்டம் ஜியோ சேவையை பயன்படுத்தும் முதல் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கும், மார்ச் 31, 2017க்குள் ஜியோ நெட்வொர்க் வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

    மார்ச் 31, 2017 ஆம் தேதியுடன் ஜியோ புத்தாண்டு சலுகைகள் நிறைவு பெறுகின்றன. அதன் பின் சந்தா கட்டணம் ஆண்டிற்கு ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.10,000 மதிப்புள்ள ஜியோ சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான வேலிடிட்டி மார்ச் 31, 2018 வரை என்பதும் குறிப்பிடத்தக்கது. 



    ஜியோ பிரைம் திட்டத்தை தேர்வு செய்ததும் வாடிக்கையாளர்கள் மாத கட்டணமாக ரூ.303 செலுத்த வேண்டும். இதன் மூலம் இலவச டேட்டா மற்றும் ஜியோ சேவைகளை பெற முடியும். இந்த திட்டம் ஜியோ புத்தாண்டு சலுகைகள் நிறைவுபெற்று ஏப்ரல் 1, 2017 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 

    ஜியோ பிரைம் திட்டத்தை தேர்வு செய்யாதவர்கள் தானாகவே பிரீபெயிட் அல்லது போஸ்ட்பெயிட் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்திற்கு மாற்றப்படுவர். இந்த திட்டங்கள் செப்டம்பர் 2016-இல் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இலவச டேட்டா வழங்கப்பட மாட்டாது, எனினும் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை ரோமிங் கட்டணம் இன்றி மேற்கொள்ள முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×