என் மலர்
செய்திகள்

வெற்றிகரமான ஸ்மார்ட்போன் பிரான்டு: இந்தியாவில் சாம்சங் தான், அப்போ ஆப்பிள்?
இந்தியாவின் வெற்றிகரமான மொபைல் பிரான்டாக சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவின் முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் பயனர்களிடத்தில் வெற்றிகரமான மொபைல் பிரான்டாக சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிள், எச்டிசி உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த தகவல்கள் சிஎம்ஆர் (Mobile Industry Consumer Insight) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பதில் அளித்துள்ள 97% பேர் சாம்சங் நிறுவனம் தாங்கள் அறிந்தவற்றில் வெற்றிகரமான பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரான்டு என வாக்களித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்திற்கு 85% பேர் தங்களது வாக்குகளை அளித்திருந்தனர். இதே போல் எச்டிசி நிறுவனத்திற்கு 78% பேர் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி, பிளாக்பெரி மற்றும் லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்களும் டாப் பிரான்டுகளாக தேர்வு செய்யப்பட்டதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பகத்தன்மைக்கு 72%, சந்தையில் தலைமைத்துவத்திற்கு 71% மதிப்பெண்களை பெற்று சாம்சங் நிறுவனம் முன்னிலை பிடித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதிக வித்தியாச கண்டுபிடிப்பிற்கு 78% மதிப்பெண்களையும், அழகிய வடிவமைப்பிற்கு 76% மதிப்பெண்களும், நம்பகத்தன்மைக்கு 72% மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதே போல் எச்டிசி நிறுவனம் வித்தியாச கண்டுபிடிப்புகளுக்கு 76%, வடிவமைப்பு மற்றும் தோற்றத்திற்கு 76% மதிப்பெண்களை பெற்றுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்திருந்தாலும், ஒரு சில நிறுவங்கள் மட்டுமே இந்திய சந்தையில் நீடித்துள்ளன. மொபைல் போன்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. என சிஎம்ஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story