search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்
    X

    நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

    நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியினை எச்எம்டி நிறுவனம் கோரியுள்ளது.
    பீஜிங்:

    மொபைல் போன் சந்தையில் நோக்கியா பிராண்டு ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. மொபைல் போன் விற்பனையில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கும் நோக்கியா நிறுவனம் சந்தையில் சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் இன்றும் நோக்கியாவிற்கான பெயர் அப்படியே தான் இருக்கிறது எனலாம். 

    விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நோக்கியா போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் பழைய நோக்கியா N சீரிஸ் போன்களை மீட்க முடிவு செய்துள்ளது. அதன் படி நோக்கியா N பெயரில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட கோரும் உரிமையை எச்எம்டி குளோபல் சீனாவின் தொழில் மற்றும் வர்த்தக நிர்வாக ஆணையத்திடம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ஒருவேளை இத்தகவல் உண்மையாய் இருந்து அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் எச்எம்டி குளோபல் மற்றும் நோக்கியா மீண்டும் N சீரிஸ் பெயரில் போன்களை வெளியிடும். முன்னதாக மொபைல் போன் சந்தையின் 70% நோக்கியா N சீரிஸ் போன்கள் ஆக்கிரமித்திருந்தன. நோக்கியா N70, N80, N90, N91, N92 உள்ளிட்ட சாதனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

    நோக்கியா N சீரிஸ் பெயரில் முதல் மொபைல் போன் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவை சிம்பயான் இயங்குதளம் கொண்டிருந்ததோடு ப்ளூடூத், 3G/ வை-பை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டன. பின் நோக்கியா N சீரிஸ் போன்களுக்கு மாற்றாக லூமியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும் இது N சீரிஸ் போன்கள் போன்று வெற்றி பெறவில்லை. 

    இன்னும் சில தினங்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்க உள்ள நிலையில் நோக்கியா N சீரிஸ் போன்கள் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    Next Story
    ×