என் மலர்

  செய்திகள்

  வோடபோன் சிறப்பு 4ஜி டேட்டா திட்டங்கள் அறிவிக்கப்பட்டன
  X

  வோடபோன் சிறப்பு 4ஜி டேட்டா திட்டங்கள் அறிவிக்கப்பட்டன

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகைகளை நான்கு மடங்கு அதிகரித்து புதிய திட்டங்களை வோடபோன் அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி டேட்டா பலன்களை நான்கு மடங்கு வரையில் அதிகரித்துள்ளது. இந்த சலுகைகள் நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூ.150க்கு ரீசார்ஜ் செய்யும் போது 1ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் ரூ.250க்கு ரீசார்ஜ் செய்யும் போது 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1500 ரீசார்ஜ் செய்யும் போது 35 ஜிபி வழங்கப்படுகிறது. 

  ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள வோடபோன் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து புதிய திட்டமாக இது அமைந்துள்ளது. எனினும் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைகளின் விலை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் 4X டேட்டா திட்டங்கள் அனைத்து டிஜிட்டல் சேனல்கள் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் எந்நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  வோடபோன் புதியதாக அறிவித்துள்ள சலுகையின் படி பழைய கட்டணத்தில் 1ஜிபி மற்றும் 10 ஜிபி டேட்டாவிற்கு ரீசார்ஜ் செய்து இன்று 4ஜிபி மற்றும் 22ஜிபி வரையிலான டேட்டாவினை பெற முடியும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் படி வோடபோன் 4ஜி டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் பின்வருமாறு..

  புதிய வோடபோன் 4ஜி திட்டங்களின் படி ரூ.150க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.250க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.350க்கு ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி 4ஜி டேட்டா, ரூ.450க்கு ரீசார்ஜ் செய்தால் 9ஜிபி 4ஜி டேட்டா, ரூ.650க்கு ரீசார்ஜ் செய்தால் 13ஜிபி 4ஜி டேட்டா, ரூ.999க்கு ரீசார்ஜ் செய்தால் 22ஜிபி 4ஜி டேட்டா, ரூ.1500க்கு ரீசார்ஜ் செய்தால் 35ஜிபி 4ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
  Next Story
  ×