என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'மனம் வருந்துகிறேன்' - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார்
- யூடியூபர் இர்பானுக்கு 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது
- யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார்.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
யூடியூபர் இர்பானுக்கு 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை கிளப்பியது.
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் யூட்யூபர் இர்பான், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரம்ஜானை முன்னிட்டு தனது மனைவியுடன் காரில் இருந்துக்கொண்டே பொதுமக்களுக்கு இர்பான் உதவி பொருட்கள் வழங்கியுள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "தங்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் சிலர் முண்டியடித்துக் கொண்டு இர்பானின் காருக்குள் கைகளை நீட்டியுள்ளனர். அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் அவமதித்து இர்பான் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இர்பானுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னேற்பாடுகள் ஏதுமில்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், சூழலை கையாளத் தெரியவில்லை; அதில் திணறி சில விஷயங்கள் செய்துவிட்டேன். அதற்காக மனம் வருந்துகிறேன் கஷ்டப்படுகிறவர்கள் மேல் Care இல்லையென சிலர் சொல்கிறார்கள்; அப்படியல்ல. நானும் அங்கிருந்து வந்தவன்தான்" என்று தெரிவித்துள்ளார்.






