நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்- சிறுமிகளுக்கு அனுமதி மறுப்பா?- நிர்வாகம் விளக்கம்

விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது.
நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்- சிறுமிகளுக்கு அனுமதி மறுப்பா?- நிர்வாகம் விளக்கம்
Published on

நெல்லை:

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவர், சிறுமிகள் பேசும் வீடியோ காட்சிகளும், அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் சபாநாயகர், மேயர், துணை மேயர், முன்னாள் அமைச்சர், மண்டலகுழுத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஒருவர் முகநூல் பக்கத்தில், கோவில் சமபந்தி விருந்தில் பேட்டையைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார். சமபந்தி விருந்து என்பது பொதுவானது, இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை, வந்திருந்த 792 பயனாளிகள் உணவு சாப்பிட்டு விட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக கோவில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று கோவில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com