என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? - வானிலை மைய தென் மண்டல தலைவர் விளக்கம்
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
* தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
* தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
* கடந்த 24 மணிநேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவானது. அதிகபட்சமாக காயன்பட்டினம் திருச்செந்தூரில் 15 செமீ மழை பதிவானது.
* அக்.1 - 16 வரை 16 நாட்களுக்கான இயல்பான மழை அளவு 7 செமீ ஆகும். ஆனால் இந்த் காலட்டத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் இயல்பை விட 37% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
* குமரிக்கடல் அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
* வரும் 18 ஆம் தேதிவாக்கில் கேரளா -கர்நாடகா பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
* வரும் 24ஆம் தேதிவாக்கில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நாகணர்த்து வலுவடைய வாய்ப்புள்ளது.
* மழை காலங்களில் பல புயல்கள் உருவாக வாய்ப்பு. எத்தனை புயல் உருவாகும் என்பது இப்போது சொல்ல முடியாது
* அடுத்த 7 தினங்களில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
* அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
* சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.






